ADDED : ஆக 03, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்-பவானி
மெயின் ரோட்டில், மங்களம் நகர் அருகில், பூனாச்சி அட்டவணைப்புதூரை
சேர்ந்த கவுதம், 36, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்துள்ளார். கடையின்
மேற்கூரையை பிரித்து நேற்று முன்தினம் நள்ளிரவு உள்ளே இறங்கிய ஆசாமிகள், 5,000 ரூபாய், வெள்ளி அரைஞாண் கயிறு, பிரேஸ்லெட்டை திருடி சென்றுள்ளனர்.
அதே
பகுதியில் மாடியில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தின் பூட்டை
உடைத்து, 68,500 ரூபாயையும் திருடி சென்றுள்ளனர். அந்தியூர் போலீசார்
நேற்று காலை, இரு கடைகளிலும் ஆய்வில் ஈடுபட்டனர். டிபார்ட்மெண்ட்
ஸ்டோரில் உள்ள கேமரா காட்சிகளை சோதனை செய்ததில், முகமூடி அணிந்த
ஒருவர், பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது பதிவாகியுள்ளது.
