ADDED : ஏப் 05, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுந்தப்பாடியில்30 மி.மீ., மழை
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் வெகு நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கவுந்தப்பாடியில்-30 மி.மீ., மழை பதிவானது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): இலந்தைகுட்டைமேடு-18.4, அம்மாபேட்டை-11.2, சென்னி மலை-7.2, நம்பியூர்-7, கொடிவேரி அணை-2, கொடுமுடி-2, மொடக்குறிச்சி-1. நேற்று வழக்கம்போல மாநகரில் கடும் வெயில் வாட்டியது.

