/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., சார்பில் போட்டி 300 மாணவர் பங்கேற்பு
/
தி.மு.க., சார்பில் போட்டி 300 மாணவர் பங்கேற்பு
ADDED : நவ 23, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு தி.மு.க., இளைஞரணி சார்பில், மாநில அளவிலான திறன் போட்டி நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி, போட்டிகளை துவக்கி வைத்து பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, நுால் வழங்கினார். போட்டியில், 300க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தினர். கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாநகர செயலர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

