நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் நேற்று வருடாந்திர ஆய்வு செய்தார்
. ஆயுதப்படை பிரிவு பதிவேடு, கோப்பு, துப்பாக்கி, ஆயுதங்கள் வைப்பறையை பார்வையிட்டார். மாவட்ட போலீசாருக்கு வழங்கப்பட்ட அனைத்து ரக வாகனங்கள், ரோந்து செல்லும் டூவீலர்களையும் ஆய்வு செய்தார். பிறகு ஆயுதப்படை போலீசாரின் குறை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவில் ஆய்வு செய்தார்.

