/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நியமன கவுன்சிலர் பதவிக்கு மாநகராட்சியில் 31 பேர் மனு
/
நியமன கவுன்சிலர் பதவிக்கு மாநகராட்சியில் 31 பேர் மனு
நியமன கவுன்சிலர் பதவிக்கு மாநகராட்சியில் 31 பேர் மனு
நியமன கவுன்சிலர் பதவிக்கு மாநகராட்சியில் 31 பேர் மனு
ADDED : ஜூலை 18, 2025 01:35 AM
ஈரோடு, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் தலா ஒரு நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து, கடந்த, ௧ம் தேதி முதல் மனு பெறப்பட்டு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதன்படி கடந்த, 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, ஈரோடு மாநகராட்சியில், 22 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடைசி தினமான நேற்று ஒன்பது பேர் என, ௩௧ பேர் விண்ணப்பித்தனர். இதில் ஆண்கள், 24 பேர்; பெண்கள் ஏழு பேர். விண்ணப்பம் மீதான பரிசீலனை கலெக்டர் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் தகுதியான நபர் பரிந்துரைக்கப்பட்டு, நியமன கவுன்சிலர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.