தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/310 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

310 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

310 பட்டாசு கடைகளுக்கு அனுமதி


UPDATED : நவ 03, 2026 07:15 AM

ADDED : நவ 03, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 07:15 AM ADDED : நவ 03, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில், 310 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும், 8ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக கடைகள் அமைக்க விண்ணப்பம் பெறப்பட்டது. வருவாய் துறை, தீயணைப்பு, உள்ளாட்சி துறை, போலீஸ் உள்ளிட்ட அனுமதிகளுடன் விண்ணப்பம் ஆன்லைனில் பெறப்பட்டது.இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்ட அளவில், 321 இடங்களில் தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க விண்ணப்பம் பெறப்பட்டன. விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்ற ஆய்வில், சில குறைபாடுகள் இருந்ததால், 11 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதி, 310 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதி மீறல் இருந்தால் அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us