/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 19, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறைதீர் கூட்டத்தில்
315 மனுக்கள் ஏற்பு
ஈரோடு, நவ. 19-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 315 மனுக்கள் வரப்பெற்றன. அந்தந்த துறை விசாரணைக்காக அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வில் உயிரிழந்த, மூன்று பேரின் வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா, 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.