ADDED : அக் 19, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபியில் 32 மி.மீ., மழை
ஈரோடு, அக். 19-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டிய போதிலும், சில இடங்களில் மழை பதிவானது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில்-32.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. எலந்தைகுட்டைமேடு-14.6, வரட்டுப்பள்ளம் அணை-8, கொடிவேரி அணை-5, சத்தியமங்கலம்-4, பவானிசாகர் அணை-1.6 மி.மீ., மழை பதிவானது. மழையால் கோபி மற்றும் அந்தியூரில் மூன்று சிறிய வீடுகள் பகுதியாக சேதமானதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.