/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 322 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 322 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 15, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. கருணை அடிப்படை பணி, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா என்பது உட்பட, 322 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு, மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கட்டுமான தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித்திட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்துள்ள, 1 தொழிலாளருக்கு வீடு கட்ட, 4 லட்சம் ரூபாய் நிதியுதவி, விபத்தில் மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு, 2.05 லட்சம் ரூபாய் நிவாரண நிதி என, 20 பேருக்கு, 10.45 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

