ADDED : அக் 14, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: துாத்துக்குடியில் இருந்து ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்-கெட்டுக்கு, நேற்று மீன்கள் வந்தன. இதில் கொம்பு சுறா மீனும் விற்பனைக்கு வந்தது. ஒரு மீனின் எடை, 35 கிலோ. ஒரு கிலோ, 450 ரூபாயாகும். முள் இல்லாததால் எளிதில் சமைத்து சாப்பிடலாம் என்பதால், மீன் பிரியர்கள் விரும்பி வாங்கி சென்-றனர்.
இதேபோல் ஆஸ்துமாவுக்கு மருந்தாக கருதப்படும் முரல் மீனும் வந்திருந்தது. இது ஒரு கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது. இதன் முன்புறம் ஊசி போன்றும், பின்புறம் பாம்பு போன்ற அமைப்பும் கொண்டதாக இருக்கும். இதை வாடிக்கையாளர்கள் ஆச்சர்யத்-துடன் பார்த்தனர்.