/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம்
/
கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம்
கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம்
கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம்
ADDED : அக் 22, 2024 01:10 AM
கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல்
38 மாணவ, மாணவியர் காயம்
சென்னிமலை, அக். 22-
துடுப்பதியில் இயங்கும் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, வெள்ளோடு அருகே நேற்று காலை சென்றது. அதேசமயம் மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சும், மாணவ, மாணவியருடன் சென்றது. கொம்மகோவில்புதுார் பிரிவில் இரு பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், 2௩ பள்ளி மாணவ, மாணவியர், 15 கல்லுாரி மாணவர் என, ௩௮ பேருக்கு காயம் அடைந்தனர். இதில் மூன்று பள்ளி மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வெள்ளோடு போலீசார், பெற்றோர்கள், அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவ, மாணவியரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் தகவலறிந்து சென்றார். மாணவ, மாணவியருக்கு ஆறுதல் கூறி, அனைத்து துறை டாக்டர்கள் ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார். அதன்படி மருத்துவ குழுவினர் மாணவ, மாணவியருக்கு சிகிச்சை அளித்தனர்.