/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமையல் மாஸ்டரை தாக்கிய 4 பேர் கைது
/
சமையல் மாஸ்டரை தாக்கிய 4 பேர் கைது
ADDED : மே 11, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அந்தியூர் அருகே ஒலகடத்தை சேர்ந்தவர் சங்கர், 36, சமையல் மாஸ்டர். நேற்று முன்தினம் இரவு, மைலம்பாடி டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். அப்போது போதையில் வந்த நான்கு பேர், அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.
தன்னிடம் இல்லை என்று கூறியதால், நான்கு வாலிபர்களும் தாக்கியுள்ளனர். காயமடைந்த சங்கர், பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து, பவானி போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில், ஒலகடம், சோலையம்பாளையம் மணிகண்டன், 23: பவானி, பழனிபுரம் முதல் வீதி பரத், 24; பவானி, சாணார்பாளையம் தினேஷ், 23; பவானி, கூனக்காபாளையம் நந்தகோபால், 25, ஆகியோரை கைது செய்தனர்.

