/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 துணை தேர்வுக்கு 4 மையங்கள் அமைப்பு
/
பிளஸ் 2 துணை தேர்வுக்கு 4 மையங்கள் அமைப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:28 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 துணை தேர்வு எழுத மாணவ, மாணவியருக்கு நான்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் பிளஸ் 2 பொது தேர்வு நடந்தது. மே மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் தேர்ச்சி பெறாத, 450 மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் அந்தந்த பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் மூலம் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் வரும், 25ல், துவங்கி ஜூலை 2 வரை பிளஸ் 2 துணை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக பவானி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வைரவிழா மேல்நிலைப் பள்ளி கோபி, சத்தியமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
வரும் நாட்களில் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதுவோர், தேர்வு பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரம் தெரியவரும் என, பள்ளி கல்வி துறையினர்
தெரிவித்தனர்.