/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது
/
ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது
ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது
ஆசிரியரிடம் மிரட்டி வழிப்பறி 4 கல்லுாரி மாணவர் கைது
ADDED : அக் 19, 2024 02:29 AM
பெருந்துறை: பெருந்துறை அடுத்த சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் சர்மா, 29; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் மாலை பைக்கில் பெருந்துறை நோக்கி சென்றார்.
அப்போது ஒரு சிறுவன், பெருந்துறை ஜெ.ஜெ.நகர் வரை செல்-வதாக லிப்ட் கேட்டகவே, அவனை ஏற்றிக் கொண்டார். சிறுவன் கூறிய இடம் வந்தபோது இறக்கி விட்டார். அப்போது அங்கு மற்-றொரு பைக்கில் மூன்று சிறுவர்கள் வந்தனர். லிப்ட் கேட்டு வந்த சிறுவனுடன் சேர்ந்து, சர்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். மொபைல்போனை பறித்து, ஜி-பேவில், 36,400 ரூபாயை எடுத்துக் கொண்டனர். அவர் போட்டிருந்த அரை பவுன் மோதிரத்தை கழற்றிக்கொண்டு, பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சர்மா அளித்த புகாரின்படி, பெருந்துறை போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் கம்மன்குறிச்சி, கிருஷ்-ணபுரத்தை சேர்ந்த, ௧௭ வயது சிறுவன்; சிவம்பதி, வெள்ளாளர் வீதி ஆறுமுகம் மகன் மைதீஷ், 19; திருமலைபதி, துாத்துக்-காட்டை சேர்ந்த, 17 வயது சிறுவன்; பெருந்துறை, ஆர்.எஸ்.கொம்மக்கோவிலை சேர்ந்த துரைசாமி மகன் பிரகதீஷ்-வரன், 18, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும், சேலம் மற்றும் ஈரோடு தனியார் பொறியியல் கல்-லுாரியில் படிக்கின்றனர். நாமக்கல்லில் தனியார் பள்ளியில் படித்-தபோது ஏற்பட்ட நட்பு, கல்லுாரி சென்றபிறகும் தொடர்ந்தது. இந்நிலையில் ஆசிரியரிடம் மிரட்டி பணம் பறித்து கைதாகியுள்-ளனர்.

