ADDED : ஆக 20, 2026 05:52 AM
ஈரோடு:ஈரோட்டில், 40 அடி ஆழ கிணற்றில் சிக்கி கொண்ட, 4 மயில்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ஈரோடு,
மூலப்பாளையம் விநாயகர் கோவில் 2வது வீதி சரஸ்வதி மஹால் எதிரே
சந்திரன் என்பவருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. இதில், 40
ஆழ கிணறு உள்ளது. இதில் 4 அடி நீர்மட்டுமே உள்ளது. இந்நிலையில்,
நேற்று மதியம் முதல் கிணற்றுக்குள் இருந்து மயில் சத்தம் போட்டவாறு
இருந்தது. அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, 4 குட்டி
களுடன் மயில் வெளியே வர வழியின்றி தவித்தது தெரியவந்தது.
இதுகுறித்து
பொதுமக்கள் மதியம், 2:30 மணிக்கு ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல்
தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கியதும், தாய்
மயில் அங்கிருந்து பறந்து கிணற்றுக்கு வெளியே வந்தது. பின்னர்
வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் நான்கு மயில் குட்டி
களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் நான்கு மயில்களும், தாய் மயிலுடன் அங்கிருந்து சென்றன.
