ADDED : ஜூன் 16, 2026 03:52 AM
ஈரோடு; ஈரோடு, சூரம்பட்டிவலசு, மதுரை வீரன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீ-சாருக்கு தகவல் கிடைத்தது. சூரம்பட்டி எஸ்.ஐ., குணசேகரன் தலைமையிலான போலீசார் சென்-றனர். பணம் வைத்து சீட்டாடிய அதே பகுதியை சேர்ந்த, 42 வயது முதல் 52 வயது வரையிலான நான்கு பேரை கைது செய்தனர்.
மது, புகையிலை விற்ற 21 பேர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில், மது பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை நடப்ப-தாக போலீசாருக்கு புகார் வந்தது. நேற்று ஒரே நாளில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்-டதாக, 11 பேரை போலீசார் கைது செய்து, 174 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்ற, 10 பேரை கைது செய்து, 6.73 கிலோ புகையிலை, குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
