ADDED : பிப் 20, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த ராமலிங்கபுரம், பாலக்காட்டு புதுாரை சேர்ந்தவர் தியாகராஜன். தோட்டத்தில் பட்டி அமைத்து, ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று காலை பட்டிக்கு சென்ற-போது, நான்கு ஆடுகள் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. தெருநாய்கள் நள்ளிரவில் பட்-டிக்குள் புகுந்து கடித்தது தெரிய வந்தது. இதில் நான்கு ஆடுகள் பலியானதுடன், சில ஆடுகள் பலத்த காயமடைந்தன. இப்பகுதியில் தெருநாய் நடமாட்டம் அதிகரித்து வருவதால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

