/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா பொருள் விற்ற4 கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா பொருள் விற்ற4 கடைகளுக்கு 'சீல்'
ADDED : டிச 14, 2024 01:24 AM
குட்கா பொருள் விற்ற4 கடைகளுக்கு 'சீல்'
ஈரோடு, டிச. 14-
ஈரோடு மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஜாகிர் உசேன், தங்கராஜ் தலைமையில், நான்கு மண்டலங்களிலும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று ஒரே நேரத்தில் கடைகளில் சோதனை நடத்தினர். இதில், 49வது வார்டு சாமுண்டி நகரில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து, கடைக்கு 'சீல்' வைத்தனர். இதேபோல், 35 வது வார்டு, மேட்டூர் சாலையில் ஒரு கடை, மூன்றாவது வார்டு ஆர்.என்.புதுார் பகுதியில் ஒரு கடை; 40வது வார்டு கருங்கல்பாளையம், பெரிய மாரியம்மன் கோவில் அருகே ஒரு கடையில் போதை பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளை சீல் வைத்தனர். நான்கு கடைகளிலும், 4.5 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.