/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளியை தாக்கிய வழக்கில் டாஸ்மாக் பார் ஊழியர் 4 பேருக்கு சிறை
/
மாற்றுத்திறனாளியை தாக்கிய வழக்கில் டாஸ்மாக் பார் ஊழியர் 4 பேருக்கு சிறை
மாற்றுத்திறனாளியை தாக்கிய வழக்கில் டாஸ்மாக் பார் ஊழியர் 4 பேருக்கு சிறை
மாற்றுத்திறனாளியை தாக்கிய வழக்கில் டாஸ்மாக் பார் ஊழியர் 4 பேருக்கு சிறை
ADDED : ஆக 01, 2025 01:15 AM
ஈரோடு, ஈரோடு, மரப்பாலத்தை சேர்ந்தவர் சதகத்துல்லா, 30, மாற்று திறனாளி. இவரது சகோதரன் மகன், ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்திருந்தார். அவரை பார்க்க சதகத்துல்லா, 2017 அக்.,7ல் சென்றார். உறவினர்களும் கொடுமுடியில் இருந்து வந்திருந்தனர்.
சதகத்துல்லா, அவரது உறவினர் ஒருவருடன், அன்றிரவு மது அருந்த ஈரோடு டவுனில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றனர். சதகத்துல்லா குவார்ட்டர் வாங்கினார். மீதி சில்லரை கேட்ட போது பார் ஊழியர்களுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பார் ஊழியர்கள் அவதுாறாக பேசி, இரும்பு கம்பியால் சதகத்துல்லா மற்றும் உறவினரை தாக்கினர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து புகாரளித்தனர். இது தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார், பார் ஊழியர்கள் நால்வரை கைது செய்தனர்.
இவ்வழக்கு ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2ல் நடந்தது. மாஜிஸ்திரேட் ராஜ்குமார் நேற்று தீர்ப்பளித்தார். விசாரித்து பார் ஊழியர்களான ஈரோடு கருப்பையா, 43 என்பவருக்கு ஐந்தாண்டு சிறை, ௩,௦௦௦ ரூபாய் அபராதம், புதுக்கோட்டை பரசுராம், 56, என்பவருக்கு ஐந்தாண்டு சிறை, ௩,௦௦௦ ரூபாய் அபராதம், புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன், 42, என்பவருக்கு நான்காண்டு சிறை, புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார், 39, என்பவருக்கு இரண்டாண்டு சிறை, ௧,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.