ADDED : ஏப் 05, 2024 01:08 AM
ஈரோடு:ஈரோடு
லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், 15.28
லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக, 1,688 ஓட்டுச்சாவடி
மையங்கள் உள்ளன.
ஈரோடு லோக்சபா தொகுதியில், 31 வேட்பாளர்
போட்டியிடுவதால், 2 ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்படும். முதல்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 வேட்பாளர்; இரண்டாவது
இயந்திரத்தில் முதல், 15 இடங்களில் வேட்பாளர் விபரம், 16வது இடத்தில்
நோட்டோ இடம் பெறுகிறது.
இந்நிலையில் அனைத்து
வேட்பாளர்களுக்கும் பெயர், கட்சி அல்லது சுயேட்சை விபரம், சின்னம்
ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில்
ஒட்டுவதற்கான பெரிய ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணி நடந்து வருகிறது.இதுபற்றி
அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில்
ஒட்டுவதற்கான ஓட்டுச்சீட்டு பிரிண்டிங் முடிந்துவிட்டது. அவற்றை
பாதுகாப்பாக எடுத்து வர, அதிகாரிகள் வாகனங்களில் சென்றுள்ளனர்.
இன்று அல்லது நாளை இயந்திரங்களில் ஒட்டப்படும். கூடுதல் சீட்டுகள்,
மிகப்பெரிய அளவிலான சீட்டுகள் என அச்சிடப்பட்டுள்ளது. அவை,
ஒவ்வொரு ஓட்டுச்சாவடி நுழைவு வாயில் சுவரிலும் ஒட்டப்படும்.
இதற்காக, 40,000 ஓட்டுச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. இவ்வாறு
கூறினர்.

