/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 410 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 410 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 03, 2024 03:50 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உட்பட, 410 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கட்டுமான பணியிட விபத்தில் மரணமடைந்த நான்கு தொழிலாளர் குடும்பத்தினருக்கு தலா, 1.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை கலெக்டர் வழங்கினார். கிறிஸ்தவ தேவாலய உபதேசியார், பணியாளர், 10 பேருக்கு நலவாரிய அட்டை உட்பட, 11 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.