/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 415 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 415 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 22, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 415 மனுக்கள் ஏற்கப்பட்டு, துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டை அரசு போக்குவரத்து நகரை சேர்ந்த, நீரில் மூழ்கி இறந்த டேவிட்ராஜ் மனைவி தவசியம்மாளுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. ஐந்து பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டி, சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற, 10 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.