/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
44,320 கிலோ விதைகளைவிற்பனை செய்வதற்கு தடை
/
44,320 கிலோ விதைகளைவிற்பனை செய்வதற்கு தடை
ADDED : மார் 16, 2025 01:26 AM
44,320 கிலோ விதைகளைவிற்பனை செய்வதற்கு தடை
ஈரோடு:ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அரசு, அரசு சார்பு, தனியார், நர்சரி விதை விற்பனை நிலையங்களில் கடந்த, 10 மற்றும் 11ல், மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர், மதுரை, திருமங்கலம், திரப்பரங்குன்றம் பகுதி விதை ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் விதை இருப்பு, விலை விபர பலகை, விதை விற்பனை உரிமம், விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்று, முறைப்பு திறன் அறிக்கை, விற்பனை பட்டியல் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம், 24 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடந்தது. விதை குவியலில், 29 விதை மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது.
இதில் பதிவு சான்றில்லாத விதை, முளைப்பு திறன் அறிக்கை இல்லாத விதை, சரியான முறையில் சேமிக்காத விதை என, 12 குவியல் கொண்ட, 44,320 கிலோ விதை விற்க தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு, 20 லட்சத்து, 85,970 ரூபாய். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.