/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., மகளிர் மாநாடு ; 450 போலீசார் பயணம்
/
தி.மு.க., மகளிர் மாநாடு ; 450 போலீசார் பயணம்
ADDED : டிச 29, 2025 09:48 AM
ஈரோடு: தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கார-ணம்பேட்டையில் இன்று நடக்கிறது. தி.மு.க., - எம்.பி. கனிமொழி தலைமை வகிக்கிறார். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதய-நிதி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டு பாதுகாப்புக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலை-மையில், 450 போலீசார் பல்லடத்துக்கு நேற்று புறப்பட்டனர்.
பல்லடம் மகளிர் மாநாடு பாதுகாப்பு, பொல்லான் பிறந்த நாள் நிகழ்ச்சி, விவசாயிகள் மாநாடு உள்ளிட்டவற்றுக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டதால், மாவட்டத்தில் பெரும்பா-லான போலீஸ் ஸ்டேஷன்களில், இரண்டு அல்-லது மூன்று போலீசார் மட்டுமே நேற்று பணியில் இருந்தனர்.

