ADDED : செப் 22, 2026 04:02 AM
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவ-லாக பல இடங்களில் மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிக-பட்சமாக அம்மாபேட்டையில், 48.20 மி.மீ., மழை பெய்தது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-23.40, மொடக்குறிச்சி-27, கொடு-முடி-26.40, பெருந்துறை-11, சென்னிமலை-18.40, பவானி-14.40, கவுந்தப்பாடி-9.60, வரட்டுபள்ளம் அணை-35.40, கோபி-6.20, எலந்தகுட்டை-மேடு-5.80, கொடிவேரி-2, குண்டேரிபள்ளம் அணை-2.40, நம்பியூர்-3, தாளவாடி-31. இரவில் மட்டுமே மழை பெய்வதால், அதிகாலை வேளை-களில் இதமான சூழல் நிலவுகிறது.
குளத்துக்கு நீர்வரத்துசென்னிமலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 4.30 மணிக்கு தொடங்கிய மழை, 5:00 மணி வரை பெய்தது. நள்ளிரவு, 2:00 மணி முதல் 5:00 மணி வரை கொட்டி தீர்த்தது. கனமழையால் சென்னிமலை வனப்பகுதியில் இருந்து வெளி-யேறிய மழைநீர் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் ஆண்டிகாட்டு குளத்திற்கு வந்-ததால் தண்ணீர் தேங்கி நின்றது.
விடிய விடிய மழை
ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு மிதமான வேகத்தில் தொடங்கிய மழை, அதிகாலை, 5:30 வரை பெய்தது.
