கனியாக்கிய காத்திருப்பு போராட்டம் பயன்பாட்டுக்கு வந்த சேவை மையம்
கனியாக்கிய காத்திருப்பு போராட்டம் பயன்பாட்டுக்கு வந்த சேவை மையம்
ADDED : செப் 22, 2026 04:03 AM
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில், 18 இடங்களில் மாற்றுத்-திறனாளிகளுக்கான சேவை மையங்கள் செயல்-படுகின்றன. ஈரோட்டில் பவானி சாலை பனங்-குட்டையில் ஒரு மையம் அமைந்துள்ளது.
இதுபோன்ற மையங்களில் மாற்றுத்திறனாளிக-ளுக்கான யூ.டி.ஐ.டி., அடையாள அட்டை பெறுதல், பிசியோதெரபி சிகிச்சை, மாற்றுத்திற-னாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த மாதம், 13ல் பனங்குட்டை மையம் திறக்கப்-படும் என அறிவித்து திறக்கவில்லை. இதனால் சிறப்பு கல்வி அளிப்போர், 17 பேர் பணியில் இருந்தும் செயல்பட முடியவில்லை. தினமும் மையத்தை திறந்து மூடியும், சில சேவை மட்டும் வழங்கி வந்தனர்.இந்நிலையில் நேற்று அனைத்து வகை மாற்-றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை-களுக்கான சங்க மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமையிலான மாற்றுத்திறனாளிகள் காத்தி-ருப்பு போராட்டத்தை துவங்கினர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சங்கர்கணேஷ், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மையம் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்து, பிசியோ-தெரபி பயிற்சி வழங்கும் பணி துவங்கியது. இதனால் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
