தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலங்கை தமிழர் முகாம் மாணவி முறையீடு

இலங்கை தமிழர் முகாம் மாணவி முறையீடு

இலங்கை தமிழர் முகாம் மாணவி முறையீடு


ADDED : செப் 22, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சுவேந்திரன் மகள் ஆசினி வழங்கிய மனுவில் கூறியதாவது:

கடந்த, 1990ல் இலங்கையில் இருந்து வந்து, 37 ஆண்டாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி இலங்கை தமிழர் முகாமில் வசித்தோம். கடந்த மார்ச், 7ல் அங்கு நடந்த தகராறில், எனது தந்தை, தாய், அண்ணன், பெரியப்பா குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

எங்கள் வீட்டை எதிர் தரப்பினர் சூறையாடி எரித்தனர். இதில் நான் பிளஸ் 2 வரை படித்த சர்டி-பிகேட் வரை எரிந்துவிட்டது. எங்களை பவானி-சாகர் முகாமில் வசிக்க மாவட்ட நிர்வாகம் உத்தர-விட்டு இங்கு வந்துவிட்டோம். தற்போது எங்-களை ராமநாதபுரம் மண்டபம் இலங்கை தமிழர் முகாமுக்கு செல்ல மாவட்ட அதிகாரிகள் முயற்சி செய்வதாக அறிந்தோம். நாங்கள் எவ்வித பிரச்-னையும் செய்யாமல் வசிக்கும் நிலையில், இடம் மாற்றாமல், இங்கேயே வசிக்க வாய்ப்பு தர வேண்டும். எனது படிப்பை தொடர சான்றிதழ் பெற்றுத்தந்து உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us