அரசு பள்ளி முன்னாள் மாணவர் மூன்றாவது முறையாக சந்திப்பு
அரசு பள்ளி முன்னாள் மாணவர் மூன்றாவது முறையாக சந்திப்பு
ADDED : செப் 22, 2026 04:04 AM
ஈரோடு; ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலை பள்ளியில், 1991-1999 வரை பயின்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 27 ஆண்டுக்கு பின் ஈரோட்டில் நடந்தது. நிகழ்ச்சி துவக்கமாக மறைந்த தலைமை ஆசி-ரியர், மாணவ-மாணவிகளின் போட்டோவுக்கு மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது பணியாற்றிய, 11 ஆசிரிய, ஆசிரி-யைகள், 33 மாணவர், 14 மாணவிகள் தங்கள் குடும்பத்தினர் என, 120 பேர் பங்கேற்றனர். தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, 2012 பிப்.19ல் முதல் சந்திப்பு, 2019 பிப்.,10ல் இரண்டாவது சந்திப்பு நடந்தது. இந்நி-லையில் நேற்று முன்தினம் மூன்றாவது முறை-யாக சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
