ADDED : நவ 06, 2026 05:24 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று
முன்தினம் பெருந்துறையில் அதிகபட்சமாக 48 மி.மீ மழை பெய்தது,
நேற்று
காலை நிலவரப்படி மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம்
(மி.மீ.,ல்): ஈரோடு-7.20, மொடக்குறிச்சி-5, கொடுமுடி-7,
சென்னிமலை-38, பவானி-1, கவுந்தப்பாடி-8,அம்மாபேட்டை-9.60,
வரட்டுபள்ளம் அணை-1.20, கோபி-12.20, எலந்தகுட்டைமேடு-1,
பவானிசாகர் அணை-29.80, தாளவாடி-11.40. மழைக்கு கோபியில் ஒரு குடிசை
வீடு, இரண்டு கான்கிரீட் வீடு சேதமடைந்ததாக வருவாய் துறையினர்
தெரிவித்தனர்.
* ஈரோடு மாநகரில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு
தொடங்கிய சாரல் மழை இடைவெளி விட்டுவிட்டு, 3:30 மணி வரை
தலைகாட்டியது. காலை, 9:45 மணிக்கு இரண்டாவது இன்னிங்சை விட்ட
இடத்தில் இருந்தே தொடங்கியது. ஆனால், 15 நிமிடத்தில் ஓய்ந்து விட்டது.
அதேசமயம் பல இடங்களில், 10:00 மணிக்கு பிறகும் பனிமூட்டம்
காணப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மீண்டும் பெய்த சாரல், 20
நிமிடங்களில் நின்று விட்டது. மொத்தத்தில் சாரல் மழையால், மாநகரில்
நேற்று இதமான சூழல் நிலவியது.
