/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோழிக்கடைக்காரர் வீட்டில் 48 பவுன், பணம் திருட்டு
/
கோழிக்கடைக்காரர் வீட்டில் 48 பவுன், பணம் திருட்டு
ADDED : செப் 05, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலம், நேருநகர், காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். கோபி ரோடு பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 48 பவுன் நகை, 50,000 ரூபாய் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சத்தி போலீசில் நேற்று புகாரளித்தார். ஈரோடு எஸ்.பி., சுஜாதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது. சத்தி போலீசார் வழக்குப்பதிந்து, கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.