/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுப முகூர்த்தம் எதிரொலியால் மல்லிகை பூ கிலோ ரூ.4,850
/
சுப முகூர்த்தம் எதிரொலியால் மல்லிகை பூ கிலோ ரூ.4,850
சுப முகூர்த்தம் எதிரொலியால் மல்லிகை பூ கிலோ ரூ.4,850
சுப முகூர்த்தம் எதிரொலியால் மல்லிகை பூ கிலோ ரூ.4,850
ADDED : பிப் 08, 2025 06:33 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் சில தினங்களுக்கு முன் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,520 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, 4,850 ரூபாயாக உயர்ந்தது. சுபமுகூர்த்தம் வருவதே இதற்கு காரணம் என்று, வியாபாரிகள் தெரிவித்தனர்.
முல்லை பூ கிலோ, 2,780 ரூபாய்க்கு விற்பனையானது. சம்பங்கி கிலோ, 70 ரூபாய்க்கு விற்ற நிலையில், 130 ரூபாயாக அதிகரித்-தது. இதேபோல் காக்கட்டான், கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களின் விலையும்
அதிகரித்தது. * சத்தி பூ மார்க்கெட்டிலும், மல்லிகை பூ கிலோ, 4,850 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-2,780,
காக்கட்டான்-1,425, செண்டுமல்லி-65, கோழிகொண்டை-86, ஜாதிமுல்லை-1,000, கன-காம்பரம்-650,
சம்பங்கி-130, அரளி-280, துளசி-50, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்றது.