/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவலர் எழுத்து தேர்வில் 490 பேர் 'ஆப்சென்ட்'
/
காவலர் எழுத்து தேர்வில் 490 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 10, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யம் சார்பில் போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில், இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு, திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி மற்றும் வாய்க்கால்மேடு நந்தா பொறியில் கல்லுாரியில் நேற்று
நடந்தது.
மொத்தம், 2,470 ஆண்கள், 704 பெண்கள் என, 3,174 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 124 பெண்கள், 366 ஆண்கள் என, 490 பேர் வரவில்லை. 2,684 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.

