/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர்
/
மாநகராட்சி அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர்
மாநகராட்சி அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர்
மாநகராட்சி அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர்
ADDED : நவ 10, 2025 01:45 AM
ஈரோடு;ஈரோடு மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில், 72 குழந்தைகளுக்கு ஒரே ஒரு டீச்சர் மட்டும் உள்ளார்.ஈரோடு மாநகராட்சி மாணிக்கம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்படுகிறது. இங்கு, 520 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.
நடப்பாண்டு எல்.கே.ஜி., வகுப்பில், 72 மழலைகள் உள்ளனர். ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், ஆரம்ப கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: தற்போது ஒரு தற்காலிக ஆசிரியர் மட்டுமே உள்ளார். இவருக்கு மாதம், ௫,௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பளம். எந்த விகிதாசார அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடந்தது என தெரியவில்லை. கடந்தாண்டு, 55 மழலைகள் இருந்தனர். போதிய ஆசிரியர்களை நியமிக்க அமைச்சர், கலெக்
டர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலை நீடித்தால் குழந்தைகளை எவ்வாறு பெற்றோர் சேர்ப்பர். இவ்வாறு கூறினர்.

