/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி ஆபீஸ் எதிரே விபத்துகளால் அச்சம்
/
மாநகராட்சி ஆபீஸ் எதிரே விபத்துகளால் அச்சம்
ADDED : நவ 10, 2025 01:45 AM
ஈரோடு:ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் மாநராட்சி அலுவ
லகம் செயல்படுகிறது. அலுவலகம் எதிரே செல்லும் சாலை
யில், சமீபகாலமாக அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோல் நான்கு மண்டங்களில் பணியாற்றும் அலுவலர்களும் வேலை நிமித்தமாக வருகின்றனர். இவ்வாறு வரும் வாகனங்களால் விபத்து ஏற்படாமல் இருக்கும் வகையில், மாநகராட்சி அலுவலகம் முன் செல்லும் மீனாட்சி சுந்தரானார் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தடை உயரம் குறைவாக, அகலம் அதிகமாக போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைக்காமல் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளின் வாகனமும் பலமுறை விபத்தில் சிக்கியுள்ளது. இவ்வாறு கூறினர்.

