/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி 45வது வார்டு பெரியார் நகரில் சமூக விரோத கூடாரமான சமுதாய கூடம்
/
மாநகராட்சி 45வது வார்டு பெரியார் நகரில் சமூக விரோத கூடாரமான சமுதாய கூடம்
மாநகராட்சி 45வது வார்டு பெரியார் நகரில் சமூக விரோத கூடாரமான சமுதாய கூடம்
மாநகராட்சி 45வது வார்டு பெரியார் நகரில் சமூக விரோத கூடாரமான சமுதாய கூடம்
ADDED : நவ 10, 2025 01:46 AM
ஈரோடு:ஈரோடு மாநராட்சி, 45வது வார்டு பெரியார்நகர் நான்காவது வீதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள மாணிக்க விநாயகர் கோவில் எதிரே சமுதாயக்கூடம் கட்டும் பணி தொடங்கியது. பணி நிறைவு பெறாததால் திறப்பு விழாவும் காணாமல், சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது சமுதாயக்கூடம் கட்ட திட்டமிட்டு பணி தொடங்கினர். 85 சதவீத பணி முடிந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கு சில மாதத்துக்கு முன் பணி நிறுத்தப்பட்டது.
பில் தொகை கொடுக்காததால் பணியை நிறுத்தியதாக ஒப்பந்ததாரர் தெரிவித்தார். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பணி துவங்கும் என எதிர்பார்த்தும் பலனில்லை. இரவு நேரத்தில் இளைஞர்கள் மது, கஞ்சா குடிக்கும், புகைக்கும் இடமாகி விட்டது. கட்டடத்தின் வழியாக அருகில் உள்ள வீடுகளில் புகுந்து, பொருட்களை திருடிச்சென்ற சம்பவமும் நடந்துள்ளது. ஆரம்பித்திலேயே சமுதாய கூடத்துக்கு பதிலாக பார்க் அல்லது நுாலகம் கட்டித்தருமாறு கேட்டோம்.
சமுதாய கூடம் தான் கட்டுவோம் என அடம்பிடித்து பணியை தொடங்கினர். ரெண்டும் கெட்டானாக பணி யும் முடியாமல், சமூக விரோதிகள் கூடாரமாகி, இப்பகுதி பெண்களின் நிம்மதியை கெடுத்து வருகிறது. இதுகுறித்து வார்டு கவுன்சிலர் முதல், கலெக்டர் வரை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இவ்வாறு கூறினர்.

