/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோரிக்கைகள் பழசு; ஆய்வோ புதுசு:அமைச்சரின் 'பார்வை' பலன் தருமா?
/
கோரிக்கைகள் பழசு; ஆய்வோ புதுசு:அமைச்சரின் 'பார்வை' பலன் தருமா?
கோரிக்கைகள் பழசு; ஆய்வோ புதுசு:அமைச்சரின் 'பார்வை' பலன் தருமா?
கோரிக்கைகள் பழசு; ஆய்வோ புதுசு:அமைச்சரின் 'பார்வை' பலன் தருமா?
ADDED : நவ 10, 2025 01:46 AM
ஈரோடு;ஈரோட்டில் மேம்பாலம், 80 அடி சாலை பயன்பாடு, சாலை விரிவாக்கம் தொடர்பான கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதில் காளைமாட்டு சிலையில் இருந்து மூலப்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசின் உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைந்தால் பூந்துறை சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதேபோல் ஈரோடு-சென்னிமலை சாலையில் டீசல் ஷெட் வரை ரயில்வேக்கு சொந்தமான, 20 அடி அகலத்தை சாலை விரிவாக்க பணிக்கு ரயில்வே நிர்வாகம் அளிக்க வேண்டும். மேலும் 80 அடி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க, மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி உள்ளிட்டோர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதி, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 80 அடி சாலை அமைய உள்ள பகுதி, மேம்பாலம் துவங்குமிடமான காளை மாட்டு சிலை பகுதி, ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் பகுதிகளை நேற்று முன்தினம் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு, கோரிக்கைகளை வலியுறுத்தி வருவோர் மத்தியில், சிறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

