/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவை-சேலம் இடையே விரைவு பாசஞ்சர் வருமா?
/
கோவை-சேலம் இடையே விரைவு பாசஞ்சர் வருமா?
ADDED : நவ 10, 2025 01:47 AM
ஈரோடு:ஈரோட்டில் இருந்து கோவைக்கு தினமும் காலையில் ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. பகல் பொழுதில் கோவை-சேலம் இடையே ஈரோடு வழியாக விரைவு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அதிக தொகை செலுத்தி சேலம், கோவை செல்கின்றனர். விரைவு பாசஞ்சர் ரயிலை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஈரோட்டில் இருந்து கோவைக்கு தினமும் ஒரு பாசஞ்சர் ரயில் மட்டும் இயக்கப்படுகிறது.
இது போதுமானது அல்ல. நோயாளிகள், அலுவலர்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இவ்விரு ஊர்களிடையே அதிகம் சென்று வருகின்றனர். தினம் ஒரு முறை மட்டும் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுவதை மாற்றி, தினமும் நான்கு முறை ரயிலை இயக்க வேண்டும். அத்துடன் ஈரோட்டுடன் நிறுத்தாமல் சேலம் வரை நீடிக்க வேண்டும். இதேபோல் சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கு, தினமும் நான்கு முறை சென்று வரும் வகையில் விரைவு பாசஞ்சரை இயக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
ஏற்கனவே இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவரிடம், அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

