/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலைகள் சேதம்:காய்கறி மார்க்கெட்டுக்கு வருவோர் அவதி

ADDED : நவ 10, 2025 01:47 AM
ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வ.உ.சி., மைதானம் எதிரில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. மார்க்கெட்டுக்கு செல்ல இரண்டு பாதை உள்ளது. அதில் ஒன்றான வீரப்பதிர வீதி சாலை முற்றிலும் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வருவோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், 700க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் உள்ளன. தவிர மார்க்கெட் வெளியே வீரபத்திர வீதியில் உள்ள கடைகளில் மொத்த வியாபார மண்டிகள் உள்ளன. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் காய்கறி வாங்க வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறி பாரம் ஏற்றிய வாகனங்கள் வந்து செல்கின்றன.
வீரபத்திர வீதி சாலைகள் முற்றிலும் சேதமாகிவிட்டதால், காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் குழிகளில் சிக்கி தவிக்கின்றன. டூவீலரில் மார்க்கெட்டுக்கு வரும் பெண்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
மழை காலத்தில் குழிகளில் தண்ணீர் தேங்குவதால், நடந்து செல்வோரும் தடுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. பல மாதங்களாக புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு கூறினர்.