/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு
/
மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு
ADDED : ஜூலை 27, 2025 01:02 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ தேவைக்கு, 491 டன் விதைகள் இருப்பு உள்ளன. இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியது:
மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான நெல் விதை - 260 டன், சிறுதானியங்கள் - 61.3 டன், பயறு வகைகள் - 32.1 டன், எண்ணெய் வித்துக்கள் - 138.4 டன் என, 491.8 டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்களான யூரியா - 4,002 டன், டி.ஏ.பி., - 2,284 டன், பொட்டாஷ் - 2,874 டன், காம்ப்ளக்ஸ் - 6,897 டன் இருப்பில் உள்ளன. இதன்படி நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகள் தேவையான இடுபொருட்களை அந்தந்த பகுதி வட்டார மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களில் சென்று வாங்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.