/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆய்வு நடத்திய அதிகாரிகளுக்கே வெளிச்சம்!
/
ஆய்வு நடத்திய அதிகாரிகளுக்கே வெளிச்சம்!
ADDED : ஜூலை 27, 2025 01:01 AM
ஈரோடு மாநகராட்சி, 16வது வார்டு வைராபாளையம் வாய்க்கால் மேடு ரோட்டில், ஒரு மாதத்துக்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர், காலையில் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது. இதன் எதிரொலியாக மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிச்சைமுத்து, இளநிலை பொறியாளர் சுவரன்சிங் தலைமையிலான அதிகாரிகள், கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் மூன்று இடத்தில் சோதனை செய்ததில் பாதாள சாக்கடையில் அடைப்பு இல்லாதது தெரிந்தது.
அதேசமயம் நேற்று காலை கழிவுநீர் வராததும், அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததா...கொடி அசைந்ததா?' என்ற பாடலை (இரவில் ரகசியமாக சாயப்பட்டறை இயங்குவதால் கழிவுநீர் வருகிறதா, கழிவுநீர் வருவதால் சாயப்பட்டறை இயங்குகிறதா?) இப்படி நினைக்க தோன்றுகிறது. எல்லாம் அதிகாரிகளுக்கே வெளிச்சம்...