/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் மீட்பு
/
அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் மீட்பு
ADDED : மே 29, 2025 01:24 AM
பவானி, பவானி அருகே குறிச்சி கிராமத்திற்குட்பட்ட குறிஞ்சி மலையில், வருவாய் துறைக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த மலையில் பவானி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர், சட்ட விரோதமாக நுழைந்து நிலங்களை ஆக்கிரமித்து மலைப்பகுதியை பொக்லைன் கொண்டு சமன் செய்து, ஆழ்துளை கிணறு அமைத்து, 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பயிரிட்டு இருந்தார்.
இந்நிலையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, நேற்று அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மூன்று பொக்லைன் கொண்டு தென்னை மரங்களை வேருடன் பிடுங்கப்பட்டது. மேலும் தண்ணீர் பைப் லைன்களையும் உடைத்து, வருவாய் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து மீட்டனர்.