/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய 5 பேர் கைது
/
எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய 5 பேர் கைது
ADDED : செப் 24, 2025 01:20 AM
ஈரோடு, ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டை சேர்ந்த மாரிமுத்து, அவரது மனைவி நர்மதா ஆகியோர்,வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகின்றனர்.
கடைக்கு நேற்று முன் தினம் வந்தவர்கள், ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒயர்களை திருடி சென்றனர். நர்மதா அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.
இது தொடர்பாக ஈரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நகர் துரைசாமி மகன் பாலாஜி, 20; ஈரோடு ஏ.பி.சி மருத்துவமனை அண்ணா நகர் தங்கவேலு மகன் சுபாஷ், 20; ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் அய்யனாரப்பன் கோவில் வீதி செல்வராஜ் மகன் சந்தோஷ், 21; ஈரோடு பெரியார் நகர் முருகன் மகன் ஜெயபிரகாஷ், 20, பெரியார் நகர் அசோகபுரி கார்த்திகேயன் மகன் ஸ்ரீதர், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.