ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சாஸ்திரி நகர் குமரன் நகரில் வசிப்பவர் தங்கவேல், 70; ஐந்து ஆடுகள் வளர்த்து வந்தார். வீட்டின் எதிரே மரத்தடியில் ஆடுகளை கட்டி வைத்திருப்பது வழக்கம். நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்கள், ஆடுகளை கடித்து குதறியதில் ஐந்து ஆடுகளும் பலியாகின.
தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், பலியான ஆடுகளை குழி தோண்டி புதைத்து விடுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி ஆடுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. தெருநாய்களால் ஐந்து ஆடுகள் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.