/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்பாக்கி சுடும் போட்டி ஈரோட்டுக்கு 5 பதக்கம்
/
துப்பாக்கி சுடும் போட்டி ஈரோட்டுக்கு 5 பதக்கம்
ADDED : அக் 06, 2024 02:57 AM
ஈரோடு: மாநில அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடந்தது.
இதில் ஈரோடு தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், கார்பன் 50 யார்டு பிரிவில் வெண்கலம், மதுவிலக்கு எஸ்.ஐ., பிரகாஷ், 350 மீ., 3பி ரைபிள் பிரிவில் தங்கம், ஏட்டு சத்தியமூர்த்தி ரைபிள் 300 யார்டு பிரிவில் வெண்கலம், கிரேடு-1 போலீஸ் தினேஷ் ரைபிள் 300 யார்டு ஸ்னாப் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றனர்.இதேபோல் பெண் போலீஸ் சோனியா, ரைபிள் 300 யார்டு ஸ்னாப் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற போலீசாரை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார், டி.ஐ.ஜி., சரவண சுந்தர், ஈரோடு எஸ்.பி., ஜவகர் பாராட்டி வாழ்த்தினர்.