தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவன் உள்பட 5 பேர் மாயம்

மாணவன் உள்பட 5 பேர் மாயம்

மாணவன் உள்பட 5 பேர் மாயம்


ADDED : ஜூலை 14, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி; மொடக்குறிச்சி லக்காபுரம் கரட்டான்காடு குழந்-தைசாமி மகன் பூவேஸ், 19; இன்ஜினியரிங் கல்-லுாரி மாணவன். கடந்த தேர்வில் மூன்று பாடங்-களில் தேர்ச்சி பெறாததால், தந்தை கண்டித்-துள்ளார். இதனால் லேப்டாப்புடன் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். தந்தை புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

* மொடக்குறிச்சி ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, தாயுடன் வசிக்கிறார். வேலுாரை சேர்ந்த கார்த்தி என்பவருடன் இன்ஸ்-டாகிராமில் பழகினார். அவருடன் ஏற்பட்ட தொடர்பில் ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. இதுதொடர்பாக காட்பாடி போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, வேலுார் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்நிலையில் ஈரோட்டில் தாயுடன் வசித்தார். தற்போது வேறு ஒருவருடன் பழகி-யதை தாய் கண்டித்துள்ளார். இதனால் குழந்தை-யுடன் சிறுமி மாயமாகி விட்டார். தாய் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடுகின்றனர்.* ஈரோடு சம்பத்நகர் மகேஷ் குமார் மகள் கிருத்-திகா, 15; பிளஸ் 1 படிக்கிறார். கடந்த, 12ம் தேதி இரவு வெளியே சென்றவர் மாயமாகி விட்டார். புகாரின்படி ஈரோடு போலீசார் தேடி வருகின்றனர்.

* அம்மாபேட்டை அருகேயுள்ள குருவரெட்டி-யூரை சேர்ந்த கலியமூர்த்தி மகள் ஹேமாஸ்ரீ, 19; தனியார் கல்லுாரியில் இ.சி.இ., மூன்றாமாண்டு படிக்கிறார். கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி அம்மா-பேட்டை போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us