நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கருங்கல்பாளையம், ராஜாஜிபுரம் குப்பை காடு அருகே நேற்று முன்தினம் காலை, அதே பகுதி வேலுசாமி மனைவி பழனியம்மாள், 72, என்பவரை மது விற்றதாக, கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மது விற்றதாக, பி.பெ.அக்ரஹாரம், அன்னை சத்யா நகர் கதிரேசன் மனைவி ராசாத்தி, 55; எல்லக்கடை அருகே இளையான்குடியை சேர்ந்த அருள் இருதய ராஜ், 28; ஈரோடு கனிராவுத்தர்குளம் பிரிவு அருகே, திருப்பூர், தெக்கலுார் ஆதித்யா நகரை சேர்ந்த மனோஜ் குமார், 28, ஈரோடு, கனிராவுத்தர் குளம் பகுதி ரவிச்சந்திரன், 29, ஆகியோரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.