/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 பள்ளி மாணவ,மாணவியர் வெளிநாட்டுக்கு செல்ல தேர்வு
/
5 பள்ளி மாணவ,மாணவியர் வெளிநாட்டுக்கு செல்ல தேர்வு
ADDED : பிப் 18, 2026 07:16 AM
ஈரோடு: கலை திருவிழா, மன்ற போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவ, மாணவியர் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
பவானி குருப்பநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் ஹரிவர்ஷன், வானவில் மன்ற நடவடிக்கையிலும், மூங்கில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் நிதர்சனா, ஆங்கில கட்டுரை போட்டியிலும், ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி கனிகாஸ்ரீ, வாலிபால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவிலும், ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் யோகித் ரிஷி கலை திருவிழாவிலும், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் அனுஜாஸ்ரீ, கலை திருவிழாவில் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
இதன் மூலம் இவர்கள் அனைவரும், மாநில அரசின் சார்பில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தெரிவித்துள்ளார்.

