ADDED : ஆக 05, 2026 05:08 AM
திருப்பூர்:திருப்பூர்
மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்,
ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்வதை ஊக்குவிக்கும் வகையில்
பொதுமக்களுக்கு வெறும், 50 ரூபாய்-க்கு காய்கறி விதைத்தொகுப்பு
வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர், காட்டன் மார்க்கெட்
வளாகத்தில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை உதவி இயக்குநர்
அலுவலகத்தின் வாயிலாக இந்த விதை தொகுப்புகள் வினியோகம்
செய்யப்படுகின்றன.
மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம்
அமைக்கும் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு வகையான விதைத்
தொகுப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல் தொகுப்பில்,
தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய் மற்றும் கீரை என, 5 வகையான
விதைகளும், இரண்டாவது தொகுப்பில், கொத்தவரை, சுரை, அவரை, முள்ளங்கி
மற்றும் முருங்கை என, 5 வகையான விதைகள் இடம்பெற்றுள்ளன.
விதைத்தொகுப்புகள் தேவைப்படும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்,
தங்களது ஆதார் அட்டை நகலை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். கூடுதல்
விவரங்களுக்கு, 70926 - 08799, 73391 - 36726 மற்றும் 91590 - 68705
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
