/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது
ADDED : நவ 17, 2024 01:49 AM
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது
புபுளியம்பட்டி, நவ. 17-
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காத்திருப்பு போராட்டம் நடத்திய, 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள, மந்தை புறம்போக்கு நிலத்தில் வணிக வளாக கட்டடம் கட்டும் பணியை கைவிட வலியுறுத்தி, பஸ் ஸ்டாண்ட் முன் அனைத்து கட்சியினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அ.தி.மு.க.,-காங்.,- தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி, கோஷமிட்ட, 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி, தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் கூறுகையில்,'' மேய்ச்சல் நிலத்தில் எந்தவித கட்டடமும் கட்டக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல், நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக வணிக வளாகம் கட்டி வருகிறது. நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து, ஆறு கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் விதிமீறி கட்டப்பட்டு வருகிறது. விதி மீறி கட்டிய கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்,''என்றார்.