/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'டெட்' தேர்வில் 564 பேர் 'ஆப்சென்ட்'
/
'டெட்' தேர்வில் 564 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 16, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது.
முதல் தாள் தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 13 மையங்களில் 66 மாற்றுத்திறனாளிகள், உட்பட 3,279 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு மையத்துக்குள், 9:30 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வை, 2,715 பேர் எழுதினர். 564 பேர் ஆப்சென்ட் ஆகினர். இரண்டாம் தாள் தேர்வு இன்று நடக்கிறது.

